Loading...
ஊவா மாகாணத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
Loading...
பதுளை, தெமோதர, ஹாலிஎல்ல ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய செயற்திடங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலளார் டி.ஜி.எம்.வீ. ஹப்புஆராச்சி, அமைச்சரின் பிரேத்தியகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், தேசிய நீர் வழங்கல் வடிகாமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Loading...