Loading...
சம்மர் விடுமுறையை கழிப்பதற்காக சினிமா பிரபலங்கள் ஆளுக்கொரு நாட்டுக்கு பறக்க, நடிகை மியா ஜார்ஜும் தனது தாயுடன் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்துள்ளார்.
இந்தமுறை டூரில் தனது நீண்டநாள் ஆசையான ஸ்கை டைவிங்கையும் ஒருகை பார்த்துவிட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்ல தன்னுடன் தனது அம்மாவையும் ஸ்கை டைவிங்கில் பறக்க வைத்துள்ளார் என்பது தான் இதில் ஹைலைட்டான அம்சமே.
புளோரிடாவில் உள்ள ஸ்கை டைவிங் அமைப்பு மூலம் இந்த சாகசத்தை செய்துள்ள மியா மே-15ஆம் தேதியை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Loading...
Loading...