தமிழ், தெலுங்கு என வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தார் நடிக்கி டாப்சி. திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் என்பது போல பாலிவுட்டில் காலடி வைத்த நேரத்தில் வரிசையாக இவர் நடிப்பில் வெளியான ஐந்து படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன.
இந்நிலையில், பாளிவுட்டிலேயே செட்டிலாகும் நிலைக்கு வந்துள்ளார் அம்மணி. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்பு என்றாலே தெறித்து ஓடுகிராராம். இங்கு வந்தால் தன்னை மீண்டும் கவர்ச்சி உடையை கொடுத்து மரத்தை சுற்ற விட்டுவிடுவார்கள் என்று கூறுகிறார் அம்மணி.
சமீபத்தில், பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் இவரிடம் கதை கூற சென்றுள்ளார். வாங்க என்று அன்புடன் வரவேற்றவர் ஒரு கப் காபி கொடுத்துவிட்டு நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று, கதையையே கேட்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம்.
இதனால் எனக்கு தமிழ்,தெலுங்கு பட வாய்ப்புகள் இனிமேல் கிடைக்காது என்று கூறுகிறார்கள். ஆனால், நான் ஒரு போதும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலையமாட்டேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார் டாப்சி.