Loading...
இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.
அவர் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் வீட்டு வாசலில் அயலவர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றள்ளது. அவர் உடலில் 12 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
அடையாளம் தெரியாத நபர் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்து டீ 56 ரக துப்பாக்கி பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 62 வயதுடையவராகும். அவர் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
Loading...