நாட்டில் இன்றைய தினமும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ,வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் ஏனைய பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி சூரியகுமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்யுமெனவும் மேற்கு, மத்திய, வடமத்திய,சப்ரகமுவ,காலி மாத்தறை பகுதிகளில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென், மேற்கு கடற் பிராந்தியங்களில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும். இந்தவகையில் காங்கேசன், மன்னார், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலயத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் மன்னார், புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் பகுதிகளில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுமெனவும் சூரியகுமார் தெரிவித்தார்.
இதனால் கடற்றொழினை மேற்கொள்ளும் மீனவர்கள் அவதானத்துடன் தமது தொழிலை மேற்கொள்ள வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.