தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளார் விஷால்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பத்துக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
போலீஸின் இந்த அராஜக வெறியாட்டம் குறித்து, பலரும் பலவிதமான வகைகளில் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தன் படத்தின் தெலுங்கு ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளார் விஷால். அவர் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘அபிமன்யுடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. தூத்துக்குடியில் பலியான உயிர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், இந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளார் விஷால். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டாராம் விஷால்.