Loading...
கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...
இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading...