கனாடாவில் உள்ள இந்திய உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியு் இல்லை என அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மண்டல காவல்துறை அதிகாரி ஜெனீஃபர் எவான்ஸ் கூறியதாவது: மிஸிஸாகாவிலுள்ள இந்திய உணவகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வீச்சு, பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
மேலும், அது ஒரு இனவெறித் தாக்குதல் என்று கருதவும் போதிய ஆதாரங்கள் இல்லை. எனினும், முழுமையான விசாரணை நடந்து முடிந்த பின்னர்தான் இந்தத் தாக்குதலுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குண்டு வீச்சு தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். குண்டு வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த குண்டு வீச்சு தாக்குதலிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.