கொழும்பு செய்தி:தென்னிலங்கையில் தீவரமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரையில் 11 குழந்தைகள் உரிழந்திருப்பதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வைரஸ் காய்ச்சல் காரணமாக மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
இதனால், வைத்தியசாலைகளின் ஏனைய பிரிவுகளை சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை மேலதிகமாக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நோய் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னிலங்கையில் இந்த நோய் மிக வேகமாக பரவி வருகின்றது.
எவ்வாறாயினும், இரண்டு வாரங்களில் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, பிறப்பிலிருந்தே சில நோய்கள் காணப்பட்ட சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.