பிரிவினைவாதக் கொள்கை இன்றும் வடக்கு மக்கள் மத்தியில் உள்ளது. அவை இன்றும் மாற்றம் காணவில்லை. பழைய வரலாறுகளை மீண் டும் நாட்டில் ஏற்படுத்தும் நட வடிக்கைகளை முன்னெடுப் பதாகத் தெரிகின்றது. மக்களின் மனங்களைக் குழப்பி மீண்டும் நாட்டில் பிரிவை முன்னெடுக் கும் சூழல் உருவாகி வருகின் றது.
கடந்த காலங்களில் இடம் பெற்ற அதே தவறுகளை மீண் டும் வடக்கில் செய்யத் தூண் டும் நடவடிக்கைகள் தடுக்கப் படவேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் பயங்கரவாதத் தலை வர்களை நினைவுகூரும் செயற்பாடுகள் இன்று இடம் பெற்று வருகின்றன. புலிகள் பதுக்கிவைத்த ஆயுதங்கள் இன்றும் வடக்கில் உள்ளன.
பன்னாடுகளில் செயற்படும் புலம்பெயர் புலி அமைப்புகள் மூலமாக நிதி வருகின்றது. இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தின் பின்னர் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் இன்னும் முழுமையான அரசியலில் பயணத்தில் கால் வைக்கவில்லை. கடந்த காலங்களில் இராணுவத்துடன் எனது காலம் கடந்தது. அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளராக கடமை புரிந்தேன். அப்போது எமது நாட்டில் பெரிய போர்ச் சூழல் நிலவியது. அதனை வெற்றி கொண்ட பின்னர் நாட்டினை பொருளாதார ரீதியில் வெற்றி கொள்ள நாம் முன்வந்தோம்.
எமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் இந்த அரசு முன்னெடுத்து வந்திருக்கும் என்றால் நாடு பெரிய அபிவிருத்திகளை கண்டிருக்கும். ஆனால் அவை முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. எமது எதிர்பார்ப்புகளும் சிதைந்து விட்டன.
மீண்டும் நாட்டினைச் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பங்களிப்பு அவசியம் என்பதை மறுக்க முடியாது. கூட்டு அரசின் ஆட்சிக் காலத்திலும் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு நிலைத்து நிற்கின்றது. நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் அரைவாசி பேர் தமது முடிவு தவறு என நினைக்கின்றார்கள்.
மீண்டும் சரியான தெரிவு ஒன்று அவசியம் என்று மக்கள் நினைக்கின்றனர். மக்களின் விருப்புக்கு அமைய அடுத்த கட்டம் நகர வேண்டும். இதில் நான் எந்தளவு பொருத்தமான அரசியல்வாதி என்பதை என்னால் கூற முடியாது. எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தக் காரியம் தெரியும். இதில் அவர் யாரை நியமிப்பார் என்பதை பொறுத்தே வேட்பாளர் தெரிவுகள் அமையும். அவர் என்னை தெரிவு செய்தால் நான் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கத் தயார்.
இன்று எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து அரசுக்குத் தெளிவு இல்லை. கடந்த காலத்தில் போர் நிலவிய போதும் நாம் போரை வெற்றி கொண்டோம். பயங்கரவாத தலைவர்களை அழித்த போதும் அவர்களின் செயற்பாடுகள் இன்றும் உள்ளன. பிரிவினைவாத கொள்கை இன்றும் வடக்கு மக்கள் மத்தியில் உள்ளது. அவை இன்றும் மாற்றம் காணவில்லை.
வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு பிரிவினைவாதக் கொள்கை பரவாத வகையில் பாதுகாப்பை வழங்கவே நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்காக இராணுவக் கட்டுப்பாடு அல்ல. அவர்களின் வாழ்க்கையை இராணுவத்தை கொண்டு அடக்க முயற்சிக்கவில்லை.
நாட்டினை பாதுகாக்க வேண்டிய சில நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். 2014ஆம் ஆண்டு காலத்தில் வடக்கில் எந்த பாதைகளும் மூடப்படவில்லை. அவர்களை சோதிக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அவர்களை சாதாரணமாக வாழ இடம் கொடுத்து முக்கிய பகுதிகளில் மாத்திரம் இராணுவத்தை பலப்படுத்தி வைத்திருந்தோம்.
ஆனால் இன்று அவை இல்லை. வடக்கும் பாதுகாப்பில் இல்லை. எமது நிர்வாகத்தில் பிரிவினைவாதத்தை பலப்படுத்தும் துண்டறிக்கை (போஸ்டர்) ஒன்றைக் கூட ஒட்டுவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
பிரிவினைவாதத்தை முன்னெடுக்கும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்ட போதும் நாம் உடனடியாக அவற்றை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இன்று நிலமைகள் அவ்வாறு அல்ல. பழைய வரலாறுகளை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிகின்றது.
இன்று தொழிநுட்ப வளர்ச்சி இவற்றை முன்னரைவிட விரைவான பயங்கரவாத நடவடிக்கைகள் வரையில் கொண்டு செல்லும். பிரிவினை குறித்து தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டு இறுதியில் மக்களை நாட்டுக்கு எதிராக திருப்பும் நடவடிக்கைகளை இன்று வடக்கின் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவற்றினை கட்டுபடுத்த வேண்டும்.
அதேபோல் தெற்கில் தலைதூக்கும் இனவாத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டும். இனங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க வேண்டும் என்றார்.