Loading...
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம் (56 வயது) என்பரே படுகாயமடைந்துள்ளார்.
Loading...
சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்
குறித்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...