Loading...
நாட்டையே தடம்புரட்டியுள்ள கனமழை, இன்றிலிருந்து குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா,பதுளை, களுத்துறை, காலி, குருணாகல், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நீடிக்கும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதோடு, ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...