அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரரும், நிலவில் நான்காவது நபராக காலடி வைத்தவருமான ஆலன் பீன் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலன் பீன்(86). இவர் கடந்த 1969ஆம் ஆண்டு நிலவிற்கு சென்றவர். விண்வெளி வீரராக இருந்தாலும், பொறியாளர், ஓவியர் என பன்முகத்தனமை கொண்டவராக விளங்கினார்.
அமெரிக்காவின் கப்பற்படை தலைவராக தனது வாழ்வைத் தொடங்கிய ஆலன் பீன், கடந்த சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதற்காக ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 86வது வயதில் ஆலன் பீன் நேற்று மரணம் அடைந்தார். பன்முகம் கொண்ட ஆலன் பீனின் இழப்பை ஈடு செய்ய முடியாது என நாசா வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆலன் பீன் தனது வாழ்நாளின் பிற்பகுதியில் விண்வெளியில் தாம் சென்ற அனுபவத்தை ஓவியங்களாக படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](http://dimg.zoftcdn.com/s1/photos/news/full/world/others/alan_bean001/img/625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg)