Loading...
திருடர் கும்பல்:வவுனியா, பரந்தன் ஊடாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களின் வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்களின் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா ஆகியொர் இணைந்து குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கிபிடித்துள்ளனர்.
Loading...
அத்துடன், தர்மபுரம் பொலிஸாரிடம் குறித்த இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தர்மபுரம் பொலிஸாரால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...