வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசிக்கும் சிவசீலன் தாரூபன் என்ற மாணவனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.,
நேற்று (27.05.2018) மதியம் 2 மணியளவில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார், எனினும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத குறித்த மாணவனை பெற்றோர் பல இடங்களில் தேடியள்ளனர்.
எனினும் எந்தவித தகவலும் இல்லாத நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் வர்தக பிரிவில் கல்வி கற்று வருவதுடன் இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்தவர் என்பதுடன், இவர் நேற்று வீட்டில் இருந்து செல்லும் போது சாம்பல் நிற ரீசேட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் செருப்பு அணிந்திருந்ததுடன், கறுப்பு நிற லேடிஸ் சைக்கிளில் சென்றமை குறிப்பிடத்தக்கது.