Loading...
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Loading...
Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Loading...