யாழ்.மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான இறுதி முடிவை நாடாளுன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பேசி தீர்மானியுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மக்கள் எதிர்கிறார்கள். நாடாளுன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கிறார். என்பதெல்லாம் உங்கள் பிரச்சினை. மக்களுக்கு நீர் வேண்டும் எனவும் கூறினார்.
யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தின் நீர் தேவை தொடர்பில் ஆராயப்பட்டபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி விடயம் ஆராயப்படும்போது மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் குறித்து பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அரச அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை மக்கள் எதிர்கிறார்கள் என கூறியிருந்தார்.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் எழுந்து மேற்படி மருதங்கேணி திட்டத்தை மக்கள் எதிர்கிறார்கள்.
மக்களுடன் இணைந்து அரசிய ல்வாதிகளும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் எதிர்கிறார் என்றார்.
தொடர்ந்து அரசாங்க அதிபர் தாழையடியில் அவ்வாறான மக்கள் எதிர்ப்பு எதுவும் இல்லை என கூறினார். இதற்கு பதிலளித்த பிரதமர் யாழ்.மாவட்டத்தில் நீர் தேவை எந்தளவுக்கு உள்ளது. என்பதை நான் நன்றாக அறிவேன்.
மக்களுக்கு நீர் தேவையாக உள்ளது. கடல்நீரை நன்னீராக்கு ம் திட்டம் பல இடங்களில் உள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் வெற்றிகரமாக செயற் பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அரசியல்வாதிகள் எதிர்கிறார்கள், மக்கள் எதிர்கிறார்கள் என்பதெல்லாம் எங்களுடைய பிரச்சினை அல்ல. அது உங்களுடைய பிரச்சினை.
எனவே அது தொடர்பாக நீங்கள் பேசி தீர்மானியுங்கள். குறிப்பாக இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பேசி ஒரு தீர்மானத்தை எடுங்கள் என்றார்.