வவுனியாவில் உள்ள ஆலயம் ஒன்றின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் சுமார் 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது.
அன்னதானத்தில் கலந்து கொண்ட போதே நகைகளை இழந்தமை தெரியவந்தது.
வவுனியா குருமன்காடு சந்தியிலுள்ள ஆலயத்தின் தேர்திருவிழா நேற்றுக் காலை இடம்பெற்றது.
இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். அதைச் சாதகமாகப் பயன்படுத்திய கொள்ளையர்கள் தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். 5 பேர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
அன்னதானம் இடம்பெறும் போதே நகைகளைப் பறிகொடுத்தவர்களுக்குத் தமது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்தது. ஆலய பரிபாலனசபையினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.