Loading...
வடக்குக்கு இருநாள் பயணம் மேற்கொண்டிருந்த தலைமை அமைச்சர் ரணிலிடம் கையளிப்பதற்காக மக்கள் தமது கைகளில் வைத்திருந்த கடிதங்களை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்னால் வீசியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு நேற்றுக் காலை சென்றிருந்த தலைமை அமைச்சரைச் சந்திப்பதற்கு மக்கள் தமது கோரிக்கைக் கடிதங்களுடன் காத்திருந்தனர்.
எனினும் அவரைச் சந்திக்க முடியாத காரணத்தால், கடிதங்களை மாவட்டச் செயலம் முன்பு வீசி விட்டுச் சென்றனர்.
Loading...
அந்தக் கடிதங்கள் அங்குமிங்கும் காற்றில் பறந்து திரிந்ததை அவதானிக்க முடிந்தது.
வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய விபர கோவைகள் உள்ளடங்களாக பல கடிதங்கள் இவ்வாறு வீசப்பட்டிருந்தன.
Loading...