ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் பிராண்ட், கடந்த வாரம் அதன் ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இன்று அதன் இந்திய விற்பனையை சந்திக்கிறது.
அறிமுகப்படுத்தப்படும் ஹானர் 7ஏ ஆனது, பிரபல இ-காமர்ஸ் தளமான, ப்ளிப்கார்ட் வழியாக, பிரத்யேக விற்பனையை தொடங்கும் என்று வெளியீட்டு நிகழ்விலேயே அறிவிக்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன.? குறிப்பாக ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.
பிரதான அம்சங்கள் என்னென்ன.?
ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் உடன் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஹானர் 7ஏ ஆனது, முன்புறத்தின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் குறைந்த அளவிலான பெஸல்களை மட்டுமே கொண்டுள்ளது.
செயலி.?
பிளாக் கோல்ட் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் ஹானர் 7ஏ-ன் அம்சங்களை பொறுத்தவரை, 720 × 1440 பிக்சல்கள் அளவிலான எச்டிடி திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 2.5டி கர்வ்டு கிளாஸ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அட்ரெனோ 505 ஜிபியூ உடனான 1.5GHz ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
பின்புற கேமரா.?
3 ஜிபி ரேம் கொண்ட 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி அதை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய நினைவகம் கொண்டுள்ள ஹானர் 7ஏ, எல்இடி பிளாஷ் மற்றும் இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது. அதாவது இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, எல்இடி பிளாஷ், எப் / 2.0 துளையுடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. தவிர, ஒரு கைரேகை ஸ்கேனர் அமைப்பானது பின்புற கேமரா அமைப்பின் கீழே உள்ளது.
இயக்க முறைமை.?
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையின் கீழ் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஹூவாய் எமோஷன் யூஐ 8.0 (EMUI) பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளது. இது ஒரு 3000 mAh நீக்க முடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டூயல் சிம், 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. அளவீட்டில் 152.4 x 73 x 7.8 மிமீ மற்றும் சுமார் 150 கிராம் எடையுள்ளதாக உள்ளது.
விலை நிர்ணயம் என்ன.?
ஹானர் 7ஏ-வை வாங்குபவர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ், ப்ளிப்கார்டில் ரூ.2,000/- என்கிற அறிமுக விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆக ஹானர் 7ஏ-வின் 3ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ.10,999/-க்கு பதிலாக ரூ.8,999/-க்கு வாங்கலாம். இது தவிர, அக்ஸிஸ் வங்கியின் டெபிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5% தள்ளுபடியும் வழங்கப்படும். அக்ஸிஸ் வங்கி பயனர்களும் ரூ 2,000/- தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.