வட கொரியா அமெரிக்கா சந்திப்பை முன்னிட்டு உலக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி வருகிறது. ஜூன் மாதம் 12 ஆம் திகதி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்திக்க உள்ள நிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கிம் ஜாங் உன்னின் வலது கரம் போல் செயல்படும் முக்கிய நபர் ஒருவர் நேற்று முதலாவது சிங்கப்பூர் சென்றடைந்தார். Chief of staff என்னும் பொறுப்பு வகிக்கும் Kim Chang-son என்னும் அந்த நபர் பீஜிங் வழியாக நேற்றிரவு சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அதேபோல் முன்னாள் வட கொரிய உளவுத்துறை தலைவரும் மூத்த அதிகாரியுமான Kim Yong-chol பீஜிங்கிற்கு சென்றபின் அதிபர்கள் சந்திப்பு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையின் துணை Chief of staff ஆகிய Joe Hagin உட்பட அமெரிக்க அரசு அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவும் அதிபர்கள் சந்திப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளது.
இதற்கிடையில் வட கொரிய அதிபரைச் சந்திக்கும் முன் அமெரிக்க அதிபரும் ஜப்பானிய பிரதமர் Shinzo Abeயும் சந்திப்பதை நேற்று தொலைபேசி உரையாடல் மூலம் உறுதி செய்து கொண்டனர்.
வட கொரியாவின் அணு, ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் அழிப்பதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் ஒத்த கருத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.