தென் கரோலினாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக எலுமிச்சம்பழச் சாறு விற்று 6000 டொலர்கள் சம்பாதித்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆண்ட்ரூவின் செல்லத்தம்பி டைலான், ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நரம்பு மண்டலம் தொடர்பான நோய்.
தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக தனது பெற்றோர் படும் துயரத்தைக் காணச் சகிக்காத ஆண்ட்ரு அவர்களுக்கு உதவ முடிவு செய்தான்.
அதற்காக அவன் எலுமிச்சம்பழச் சாறு தயாரித்து அதையும் தனது தம்பியின் பெயர் பொறித்த T-ஷர்ட்களையும் விற்கத் தொடங்கினான்.
இரண்டே மணி நேரத்தில் அவனுக்கு 5,680 டொலர்கள் கிடைத்தன. தனது தம்பியின் மருத்துவச் செலவுக்காக உதவுவதோடு தனது தம்பிக்காக ஒரு டெடி பேரும் வாங்க விரும்புவதாக ஆண்ட்ரூ தெரிவித்துள்ளான்.