Loading...
2010ம் ஆண்டு” சன் சீ” என்ற கப்பலில் பயணம் செய்து கனடாவிடம் அடைக்கலம் புகுந்து 8 வருடங்களாக அகதி அந்தஸ்து கிடைக்காமல் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த திருகோணமலையை சேர்ந்த மதியழகன் சந்தனம் அவர்கள் உயிரிழந்துள்ளார்.
இறுதிச்சடங்கு இரத்த சொந்தம் யாருமற்ற நிலையில் நண்பர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
பல கனவுகளுடன் சென்ற சந்தனம் அவர்களின் எதிர்காலம் மரணத்தில் முடிந்ததால் குடும்பத்தினர் கூட மிகுந்த கவலையில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்த சம்பவம் பலர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
Loading...