Loading...
29 இலட்சம் ரூபா பெறுமதியான 24 கிலோ (24.18kg) கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மன்னார் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பேசாலை ஒளுதுடுவை பகுதியில் வைத்து இன்று அதிகாலை சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
பேசாலை, திருதேப்புப் பகுதியைச் சேர்ந்த 27, 24 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும், மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...