தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளாள்.
அவளால் இத்தனை பேருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொது மக்களுக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்ட இடையூறு ஆகியவற்றிற்காக 15 குற்றச்சாட்டுகள் அவள் மீது சுமத்தப்பட்டதோடு சிறைத்தண்டனை மட்டுமல்லாது மன நல காப்பகத்திலும் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

அவள் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட பொலிசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டொலர்கள் செலவு ஏற்பட்டது.
அவளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவளாகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.