தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாய் பலியான ஸ்னோலின் குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22ம் திகதி பொலிசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் 18 வயதான ஸ்னோலின் என்ற பெண்ணும் அடக்கம்.
மீனவ குடும்பத்தை சேர்ந்த ஸ்னோலின், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்றைய தினமும் தனது தாயையும் அழைத்து சென்றார்.
கலெக்டர் அலுவலகம் முன்பு இருவரும் பிரிந்த நிலையில், மகள் இறந்துவிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தே அறிந்து கொண்டாராம் வனிதா.
மகள் இறந்த துக்கம் தாங்காமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வனிதாவின் ஸ்னோலின் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதை கவிதையாக எழுதியுள்ளார்.
ஒருவேளை தூக்கத்திலேயே இறந்து போனாலும் தான் பார்த்த கடை சி முகம் தாயுடையதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.