ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள காவல்துறை தலமையகத்தின் 4ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையினரினால் தொடர்ச்சியாக 05மணி நேரம் துருவித் துருவி விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் மதியம் 02.30 மணிவரையிலான ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அது குறித்து வேந்தன் தெரிவிக்கையில் ,
மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆகியவை தொடர்பிலும் , ஜனநாயக கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் துருவித்துருவி விசாரித்தனர். இருவரே விசாரணையில் ஈடுப்பட்டிருந்தனர். எனது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர்.
முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக கட்சியின் நோக்கம் ஆகும். போராளிகளை இது போன்ற செயற்பாடுகளில் இருந்து முடக்குவதற்காகவே நான்காம் மாடி விசாரணை அமைந்துள்ளது என நம்புறேன். என தெரிவித்தார்.