நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மலேசியாவில் மஹதிர் மொஹமட் பிரதமராக நியமிக்கப்பட்ட உடன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தி முன்னாள் பிரதமர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இலங்கையில் செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், ஏழைகளுக்கு ஒரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மலேசிய பிரதமரின் கொள்கைகளை நாம் முன்னுதாரணமாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் துமிந்தவிற்கா, பாதாள உலகக் குழு உறுப்பினருக்கா, தமிழனுக்காக, சிங்களவனுக்கா, முஸ்லிமுக்கா, பேர்கருக்கா என்ற காரணங்கள் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.<