Loading...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இதுபோன்ற கருத்துக்கள் இதற்கு முன்னரும் தெரிவிக்கப்பட்டுள்ளன, எனினும் தேர்தல் வரும்போது யாரை நியமிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரே முன்னிறுத்தப்படுவார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...