ஹம்பேகமுவை பிரதேசத்தில் பெண்களின் உள்ளாடைகளை திருடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல காலமாக வெளியே உலர வைத்திருந்த பெண்களின் உள்ளாடைகள் காணாமல் போயுள்ளதனால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாகிருந்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த திருடனை பிடிப்பதற்கு பிரதேச வாசிகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகிப் போனது.
ஒன்பது இடங்களில் இருந்து இந்தத் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதோடு, இதுகுறித்த பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணிகள் உலர வைக்கும் கொடிகளில் விலை உயர்ந்த ஆடைகள், சாரிகள் உலர போட்டிருந்தாலும் காணாமல் போவது உள்ளாடைகள் மாத்திரமே என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருடனைப் பிடிப்பதற்கு இளைஞன் ஒருவன் சீசீரிவி கமராக்களை பொருத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளர்.
இரண்டு மணி நேரங்களுக்கு. பின் வீடு திரும்பியதும் கமராவில் பதிவானதை பார்த்துள்ளார், அப்போது திருடன் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் விசாரணை செய்தபோது சந்தேக நபர் பதுளையில் வசிக்கும் 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் விவசாயம் செய்வதற்காக 6 மாதத்திற்கு முன்னர் ஹம்பேகமுவை பிரதேசத்திற்குச் சென்றுள்ளது, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், சந்தேக நபரை மன நோய் மருத்துவர் சோதனையிட்டப் பிறது மருத்துவரின் அறிக்கையை நிதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.