காய்ச்சல் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வர கூடியதே. சிலருக்கு சிறு விஷயங்களுக்கு கூட வரும் தூசு அலற்சி, ஒவ்வாமை போன்றவைகளால்.
இஞ்சி கஷாயம் மற்றும் மிளகு இடித்து கஷாயமும் குடிப்பது காய்ச்சலுக்கு நல்லது. காய்ச்சல் உள்ளவர்கள் பச்சை தண்ணீரை அருந்தவே கூடாது. வெந்நீர் குடிப்பதுதான் உங்கள் உடலுக்கு ஏற்றது.
காய்ச்சல் வந்துவிட்டால் சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள், அதற்கு பதிலா இட்லி, தோசை இப்படிப்பட்ட ஆகாரங்களை எடுத்து கொள்ளுங்கள்.
துளசி, தூதுவளை சாப்பிட காய்ச்சலுக்கு உகந்தது, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை அழித்து வெளியேற்ற கூடியது.
வெந்நீருடன் சீரகத்தை சேர்த்து குடிக்கலாம், அது காய்ச்சலை கட்டுக்குள் வைக்கும் சக்தி கொண்டது உடலுக்கு நன்று
காய்ச்சல் வந்தவர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும், குளிர்ந்த காற்றில் செல்லவே கூடாது. அக்காற்று காதின் வழியே சென்று உடம்பின் வெப்ப அளவை கூட்டும்.