Loading...
இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா குட்செட் வீதி 1ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையொன்றை கடத்தி சென்றுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலே குறித்த குழந்தையை கடத்தி சென்றுள்ளனர்.
Loading...
இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் குறிப்பிட்டிருந்தார்.
விரைவாக செயற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் கொண்டு தேடுதலையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...