உத்தரபிரதேசம் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கும், சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித்துக்கும்பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பெப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது.
ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சாந்தி பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு கணவரின் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
ஏன் என்று கேட்ட போது சாந்தி, ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் தனது சம்மதததை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். காதலனை மனதில் சுமந்து கொண்டு உங்களுடன் வாழ முடியவில்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து சுஜித் மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது முடிவை தெரிவித்தார். பொலிஸார் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டனர்.
சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார். அவர்களது உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர்.