வீட்டுக்குள் புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மட்கோ மஹமாயபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில், திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய சிப்பாய்யொருவரே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதிகாலை 1.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள வீட்டுக்குள் சிப்பாய் புகுந்துள்ளார். இவரைப் பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தொலைபேசி மூலம் காதல் கொண்டவருடைய வீட்டுக்குச் சென்ற வேளை அவரது கணவர் மறைந்திருந்த நிலையிலேயே சிப்பாயை அயலவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்ததாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான கடற்படைச் சிப்பாய் திருகோணமலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விசாரணைகளை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றனர்.