வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் இந்த 2 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்திற்கு செல்லும் போதும், ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதும் இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஆலயத்திற்கு செல்லும் வீதிகளில்வாகன நெரிசல் மற்றும் அதிவேகமாக பயணித்தல், வீதி போக்குவரத்து வீதிகளை கடைப்பிடிக்காமை போன்ற காரணத்தினால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.