பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் ஆரம்ப காலத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தைரியமாக மீடியா முன்பு பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆரம்பகாலத்தில் நான் நடிக்க வந்த போது பல சங்கடங்களை அனுபவித்தேன். நான் நடித்த படத்தின் ஆடிஷனில் முன்னணி இயக்குனர் ஒருவர் என்னுடைய மேலாடையை கழட்டி முன்னழகை காட்ட சொன்னார். மறுத்தால், பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ..? என்று பயந்தேன். ஆனாலும், என்னால் முடியவே முடியாது என்று விடாப்பிடியாக இருந்தேன்.
அப்போது, என்னுடைய இதயம் வேகமாக துடித்தது. என்ன நடக்கப்போகிறதோ என்ற பயம் இருந்தது. பட வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. எக்காரணம் கொண்டும் என்னுடைய அழகை அவரிடம் காட்ட கூடாது என்பதிலும், அவரின் ஆசைக்கு இணங்கி போனால் என்னுடைய கற்பு கலங்கப்படும் என்பதிலும் நான் தீர்கமாக இருந்தேன். அப்போது, நான் மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். இது போல இன்னும் சில பாலியல் ரீதியான தொந்தரவுகளை நான் அனுபவித்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெனிஃபர் லோபஸ்.