மும்பை: 6 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல டிவி சீரியல் நடிகை ஷ்ரெனு பாரிக் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் குஜராத்தை சேர்ந்த ஷ்ரெனு பாரிக்(28). தற்போது பிரபலமாக உள்ள இஷ்க்பாஸ் என்கிற இந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஷ்ரெனு தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியதாவது,
பேருந்து
சின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என் தாத்தா, பாட்டியுடன் அவர்களின் ஊரில் தான் இருப்பேன். அந்த நாட்களில் உள்ளூர் பேருந்தில் பயணம் செய்வோம். பேருந்தில் அமர இடம் கிடைக்காவிட்டால் எனக்கு சீட் கொடுக்குமாறு என் தாத்தா யாரிடமாவது கேட்பார்.
தாத்தா
ஒரு முறை என் தாத்தா கேட்டபோது ஒரு அங்கிள் என்னை தன் மடியில் அமர வைப்பதாக கூறினார். நானும் அங்கிள் தானே என்று அவர் மடியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன்.
அதிர்ச்சி
என்னமோ தவறாக நடக்கிறது என்று திடுக்கிட்டு கண் விழித்தேன். என் உடல் எல்லாம் நடுங்கியது. அந்த இடத்தில் கையை வைத்து என்னை பிடித்துக் கொள்வது சாதாரணம் போன்று என்று நினைத்தேன். அப்பொழுது எனக்கு 6 வயது. என் தாத்தா பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் அந்த அங்கிள் செய்த விஷயத்தை சொல்ல முடியவில்லை.
பயம்
அப்பவே நான் சொல்லி அந்த நபருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். என் தோழிகளும் இது போன்ற தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். வெளியே சொன்னால் சமுதாயம் நம்பை பேச்சை நம்பாதோ என்ற பயத்திலேயே சொல்லவில்லை