தில்லு முல்லு படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இஷா தல்வார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் நடித்தார் அம்மணி.
தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிப்படங்களில் நடித்து வருகிறார். வருடத்திற்கு நான்கு படங்களில் நடித்து விடுகிறார் அம்மணி. மேலும், விளம்பர படங்களிலும் நடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அம்மணி வெளியிட்டுள்ள வீடியோ வை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். லட்சங்களில் சம்பளம் வாங்கும் இஷா தல்வார் தனது வீட்டை தானே துடைக்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள வீட்டு வேலைகளை நானே செய்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
பிரபல நடிகை ஒருவர் அவரது வீட்டை அவரே சுத்தம் செய்யும் இந்த வீடியோ காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.