சமீபத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அவர் தற்போது தளபதி விஜய்யுடனும் விஷாலுடன் நடித்து வருவதால் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார்
இந்த நிலையில் இன்று அவர் சேலத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையின் 90வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
மேலும் இன்று நகைகளை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுடன் கீர்த்தி சுரேஷ் செல்பி எடுத்து கொள்வார் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் கீர்த்திசுரேஷுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் நகைகளை முன்பதிவு செய்ய அந்த நகைக்கடையின் முன் குவிந்தனர்.
அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கீர்த்திசுரேஷை பார்க்க அந்த நகைக்கடையின் முன் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சரிசெய்தனர். கீர்த்திசுரேஷ் வருகையால் கூடிய கூட்டத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது