நம் வீடுகளில் சுற்றி திரியும் பல்லிகள் அவ்வப்போது ஒருவிதமான சத்தமிடுவது வழக்கம். அத்தகைய சத்தங்களை பல்லிகள் எந்த திசையில் இருந்து எழுப்புகிறதோ அதற்கு ஏற்றாற்போல் பலன்கள் உண்டு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் வந்தடையும், விரைவில் சுப காரியம் ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.
வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பர்களாலோ அல்லது உறவினர்களாலோ எதிர்பாராத நன்மை ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.
வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டிற்கு விரைவில் சுபச்செய்தி வரும் என்று அர்த்தம்.
தீமை தரும் திசைகள்:
ஒரு வீட்டின் தென்கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் விரைவில் கலகம் ஏற்படும் என்பதை குறிப்பதாக அர்த்தம். அதோடு ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு அசுப செய்தி வந்தடையும் எனப்தை குறிப்பதாகும்.
வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத பயம் ஏற்படும் என்பதை குறிப்பதாக அர்த்தம்.
பக்கத்து மனியிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ உள்ள பல்லி தெற்கு திசையில் சத்தமிட்டால் அது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தோல்வி உண்டாகும் என்பதை குறிப்பதாகும். அதோடு தேவை இல்லாத விரய செலவு, நஷ்டம் போன்றவை ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.
பழைய பஞ்சாங்கங்களில், ‘பல்லி சொல்லுக்கு பலன்’ என்று எழுதியிருக்கும். அதைப் பார்த்தால் முழுத் தகவலும் கிடைக்கும்.