அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாசனையால் ஒருவருக்கு மர்னம் ஏற்படுவதை முன்கூட்டியே என்னால் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்த அரி காலா(24) என்ற இளம்பெண் தான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உளவியல் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், தனது 12-வது வயதில் முதன் முறையாக தமது உறவினர் இறப்பதற்கு முன்னர் அந்த வேறுபட்ட வாசனையை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இவரது உறனிரின் கடைசி நாட்களில் இவர் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர், அவர் படுத்திருந்த அறையில் அழுகிய பழத்தின் வாசனை பரவியுள்ளது.
இதற்கு முன்னர் அவ்வாறான வாசனையை அவர் அனுபவித்தது இல்லை எனவும், அந்த அறையில் இருந்த அனைவரும் அதை அனுபவித்திருக்கலாம் எனவும் கருதியுள்ளார்.
ஆனால் உறவினர்கள் எவரும் அந்த வாசனையை அனுபவித்திருக்கவில்லை. பின்னர் பல மாதங்கள் கடந்த நிலையில், பல முறை இதே வாசனையை பலர் இறப்பதற்கு முன்னர் இவர் அனுபவித்திருக்கிறார்.
ஆனால் இதை வெளியே தெரிவிக்க மறுக்கும் அவர், தமது விருப்பமான பணியான உளவியல் பயிற்சி வழங்குவதிலையே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
மக்கள் இதுபோன்ற தகவலை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதே தமது இந்த முடிவுக்கு காரணம் எனவும் அரி காலா தெரிவித்துள்ளார்.