இலங்கை நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்மெரீன் சச்(Jean Marin Schuh) மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(31) வியாழக் கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தின் மகாஓயாவில் 150 மில்லியன் யூரோ செலவில் நீர்ப்பாசன திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றமை பற்றியும் இதனால் மட்டக்களப்பு மாவட்ட பெரும்பாலான விவசாயிகள் அதிக நன்மையடைவர்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அனர்த்தங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் முதலீடுகள், துறைமுக அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, மீன்பிடித் துறை விருத்தி ஊடாக அதிக வருமானமீட்டும் புதிய முதலீடுகளை கொண்டு பிரான்ஸ் – இலங்கை நாட்டுக்கான நட்புறவின் ஊடாக பொருளாதர அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலான விரிவான திட்டங்கள் போன்றனவும் இங்கு பேசப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் செயலாளர் அசங்க அபேவர்தன, ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் ஆகியோரும் பங்கேற்றனர்.