Loading...
கொல்கத்தாவில் தனது அனுமதி இல்லாமல் தோட்டத்தில் இருந்து பூப்பறித்த வயதான மாமியாரை மருமகள் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Swapna Pal என்ற பெண்மணி, தனது 75 வயது மாமியாரை தலைமுடியை பிடித்து அடிக்கிறார். தனது தோட்டத்தில் இருந்த பூக்களை அனுமதி இல்லாமல் பறித்த காரணத்திற்காக இப்படி அடித்துள்ளார்.
வலி தாங்கமுடியாத அந்த மூதாட்டி அழுகிறார்.இந்த சம்பவத்தை அருகில் வசிப்பவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதையடுத்து, 25,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது.
Loading...
இந்த வீடியோவை பார்த்த சமூகவலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கொல்கத்தா பொலிசார் அப்பெண்மணியை கைது செய்துள்ள தகவலை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது அப்பெண் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
Loading...