தமிழ் சினிமாவில் சாதாரண நடிகையாக இருந்த ஓவியா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறிந்த நடிகையானார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றனர், ஆனால் ஓவியா இதுவரை களவாணி-2, காஞ்சனா-3 மற்றும் 90 Ml ஆகிய படங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்.
தற்போது விமலுடன் களவாணி-2 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவியாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறதாம். ஓவியாவும் யாரிடமும் வெறுப்பை காட்டாமல் புகைப்படம் எடுத்து வருகிறாராம்.
அஜித்தும் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார், தற்போது ஓவியாவும் அதே வழியை பின்பற்றுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.