சிங்கப்பூரில் Marina Bay Sands ஹோட்டலின் அருகே பாதுகாவலர்கள் யாருமின்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நடந்து செல்வதைக் கண்ட சிங்கப்பூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர்தான் தெரிந்தது அது கிம்மைப் போலவே இருக்கும் அவுஸ்திரேலிய – சீனரான Howard X என்னும் மனிதர் என்று.
முதலில் திகைத்த பொதுமக்கள் பின்னர் அவருடன் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
உருவத்தில் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அப்படியே கிம்மைப் போல காணப்படும் Howard X உடன் கைகுலுக்க பலர் ஆர்வம் காட்டினர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் இடையிலான பேச்சு வார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காகவே இவ்விதம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின்போதும், Howard X ஹாக்கி ஸ்டேடியத்தில் நடக்க, சியர் லீடர்கள் உண்மையிலேயே தங்கள் தலைவர்தான் வந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.