கனடாவின் உளவுத்துறை நியூஸிலாந்தின் ஒவ்வொரு சமுதாய மட்டமும் சீன அரசின் தாக்கத்துள்ளாகியிருப்பதாகவும், நிலைமை மோசமான கட்டத்தை அடைந்து விட்டதாகவும் எச்சரித்துள்ளது.
சீன அதிபர் Xi Jinping சீனாவை உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாடாக மாற்றுவதற்காக பல கோண திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அதற்காக அவர் நியூஸிலாந்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்.
பின் நாட்களில் சீனா உலகின் மற்ற நாடுகளை எப்படி இயக்க விரும்புகிறதோ அதற்கு ஒரு முன்னோட்டமாக நியூஸிலாந்தை இயக்கிப் பார்க்கிறது என்று கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தின் வர்த்தகம், அரசியல் மற்றும் அறிவுசார் உயர் நிலைகள் அனைத்துமே சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியால் குறி வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. சீனாவின் சில செயல்கள் நேரடியாக நியூஸிலாந்தின் தேசிய பாதுகாப்பை பாதிக்கின்றன, சில நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன என்றும் கனடா உளவுத்துறை கூறியுள்ளது.
இத்தகவல்களை மறுத்துள்ள நியூஸிலாந்து தங்களது மதிப்பு, நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராக எந்த இடையூறும் நேராத அளவில் விழிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.