வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 9.00 மணியளவில் வாகனமொன்றில் சென்ற 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கதவினையுடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2மாத கைக்குழந்தையை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியுள்ளார்.
அத்துடன் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.