Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசனையைக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் அவரது நடவடிக்கைகள் மூலம் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால் , அது அவருக்கு பாதகமானதாகவே இறுதியில் முடியும் என்றும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Loading...
வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Loading...