Loading...
மன்னார் நகர் நுழைவாயில் பகுதியை அண்டி மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் இன்று ஆறாவது நாளாகவும் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மன்னார் நீதவான் ஏ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை ஏழு மணியளவில் அகழ்வுப்பணிகள் ஆரம்பமானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Loading...
இன்றைய அகழ்வுப் பணிகளை கண்காணிப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் வருகைதந்துள்ளனர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Loading...