Loading...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த பகுதியில் விடுவிக்கப்பட வேண்டிய எஞ்சிய 59 காணி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
Loading...
ஒரு வருடங்களுக்கு மேலாக படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இதன் ஒரு பகுதி காணிகள் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டுள்ளபோதும், ஏனைய காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் போராட்டம் 15 மாதங்களுக்கு மேலாக தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...